Monday, November 30, 2015

முஸ்லிம்களை விரட்டிய LTTE - அதிர்ச்சி வீடியோ இணைப்பு



டமாகாண முஸ்லிம்கள் அவர்களது சொந்த இடங்களில் இருந்து (LTTE) அமைப்பினரினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இன்றோடு (25) வருடங்கள் பூர்த்தியாகின்றது.

1990.11.31 அன்று வடக்கில் வாழ்ந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தது  கருப்பு ஒக்டோபர் என அழைக்கப்பட்டது .

அவ்வபோது முஸ்லிம்களுடன் தமிழ்தேசியம் பேசி தமிழ் தனித்துவத்துக்காக போராடி அமைப்பாக காட்டிக்கொண்டு LTTE ர்  தனது பயங்கரவாத முகத்தையும் முஸ்லிமிடம் காட்டினர் .

 அதையும் விடாது முஸ்லிம் வியாபாரிகள் மற்றும்  இளைஞர்களை கடத்தி கொலை செய்ததை நாம் மறந்து விடவில்லை  ,

அத்தோடு அணிந்த ஆடைளுடன் வடபுல முஸ்லிம்களை (LTTE) அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்  அவர்களால்  வெளியே வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடபுல முஸ்லிம்களின் அனைத்து ஆவணம் மற்றும் சொத்துக்கள் இந்நாளில்  (LTTE) அமைப்பினால் கொல்லையிடப்பட்டது. இச்சம்பவத்தை வரலாறு பெரும் கொல்லைசம்பவங்களில் ஒன்றாக பதிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும்.


Saturday, November 7, 2015

Tuesday, August 18, 2015

கல்குடா பிரதேசத்தில் ஐக்கியதேசிய கட்சி வெற்றியீட்டியது


கல்குடா பிரதேச இறுதி வாக்கு முடிவு :- கல்குடா பிரதேசத்தில் ஐக்கியதேசிய கட்சி வெற்றியீட்டியது
கட்சிமொத்த வாக்குகள்சதவீதம் %மொத்த ஆசனங்கள்
 UNP5101346.3%4
 TNA4433427.39%2
 UPFA3542113.92%1
 ACMC3310210.15%0
 JVP53911.65%0
 OTHERS12000.37%0
 AITC4390.13%0
 DP2310.07%0
 BJP640.02%0

Thursday, July 9, 2015

மீன் சந்தையாக மாறிய அட்டாளைச்சேனை பொது நூலகம் -படங்கள் இணைப்பு

அட்டாளைச்சேனை பொது நூலகம் மீன் சந்தையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் சுகாதார அச்சுறுத்தல் மற்றும் துர்நாற்றங்களை பொறுப்பாளார்கள் கண்டு கொள்ளாமலுள்ளனர்.

இதனை அவ்விடத்திலிருந்து அகற்றி பொருத்தமான இடமொன்றுக்கு மாற்றுமாறு மிகவிரைவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.


Saturday, July 4, 2015

இப்தார் நேரத்தில் பள்ளிவாயலில் மீண்டும் குண்டு வெடிப்பு

சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிப்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இம்பெற்றுள்ளது.
இதில் அல் கொய்தா  இயக்கத்துக்கு ஆதரவான அல்- நுஸ்ரா முன்னணியின் முக்கிய தலைவர் ஒருவர் உள்ளிட்ட 25 பேர் பலியாகினர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளதாக, அங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை  ரமழான் நோன்பினை நிறைவு செய்வதற்கான இப்தார் நிகழ்வில் மக்கள் ஒன்று கூடி இருந்த போது இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை.இதற்கு யாரும் இன்னும் உரிமை கோரவும் இல்லை.

காத்தான்குடியில் இறைச்சிக் கடைகளை மூடிஆர்ப்பாட்டம்.

ஜவ்பர்கான்-
காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்கள் இன்று தமது இறைச்சிக் கடைகளை மூடி பகிஸ்கரிப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

காத்தான்குடி நகர சபையின் மாட்டு இறைச்சி வெட்டும் மடுவத்தில் கடமையாற்றும் நகர சபை ஊழியர் ஒருவரை இடமாற்றக் கோரியே இந்த பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இன்று சனிக்கிழமை காலை காத்தான்குடி நகர சபையின் மாட்டு இறைச்சி வெட்டும் மடுவத்தில் மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்கள் மாடுகளை வெட்டுவதற்காக கொண்டு சென்ற போது அங்கு கடமையாற்றும் குறித்த நகர சபை ஊழியர் மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் முறன்பாடாக நடந்து கொண்டதையடுத்தும் தகாத வார்ததைகளை கொண்டு பேசியதாலும் இவர்கள் தமது இறைச்சிக்கடைகளை மூடி பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த நகர சபை ஊழியர் அடிக்கடி இவ்வாறு மாடு வெட்டும் மடுவத்தில் மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் முறன்பாடாக நடந்து கொள்வதாலும் தகாத வார்த்தைகளை கொண்டு பேசுவதாலும் தாம் மாடுகளை வெட்டுவதற்கு பல்வேறு அசெகரியங்களை சந்திப்பதாக மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் இன்று காலை காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரனுக்கும் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்ளுக்குமிடையில் விஸேட சந்திப்பொன்று இடம் பெற்றது.

இதன் போது தமது கோரிக்கையினை மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்கள் முன் வைத்ததுடன் தாம் மடுவத்தில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் விளக்கி கூறினர்.

இதனையடுத்து குறித்த நகர சபை ஊழியரை அங்கிருந்து இடமாற்ற தான் உடனடி நடவடிக்கை எடுப்பதாக காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் உறுதியளித்தார்.

இது தொடர்பாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியுடன் கலந்து பேசியுள்ளதாகவும் ஒவ்வொரு மாதமும் மாடுவெட்டும் மடுவத்திற்கு நகர சபையினால் வௌ;வேறு ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் குறிப்பிட்டார்.

காத்தான்குடி நகர சபை பிரிவில் 20 மாட்டிறைச்சி விற்பணை செய்யும் விற்பணை நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் ஹரினுக்கு “உனக்கு தலை சரியில்லை” எனத்திட்டிய பிரதமர் ரணில்

தான் இந்நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கருத்து வெளியிடுவதனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை திட்டியதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி செயற்பாட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“உனக்கு தலை சரியில்லை” என பிரதமர் ஊவா மாகாண முதலமைச்சரிடம் கேட்டுள்ளார் என அவர் கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக இருந்தபோது அவரது 88 கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தல் காலங்களில் தனது வீட்டிற்கு வந்து நேரத்தை செலவிடுவார் எனினும் தற்போது அவ்வாறு இல்லை என ஹரின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.