Saturday, July 4, 2015

காத்தான்குடியில் இறைச்சிக் கடைகளை மூடிஆர்ப்பாட்டம்.

ஜவ்பர்கான்-
காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்கள் இன்று தமது இறைச்சிக் கடைகளை மூடி பகிஸ்கரிப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

காத்தான்குடி நகர சபையின் மாட்டு இறைச்சி வெட்டும் மடுவத்தில் கடமையாற்றும் நகர சபை ஊழியர் ஒருவரை இடமாற்றக் கோரியே இந்த பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள இறைச்சிக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இன்று சனிக்கிழமை காலை காத்தான்குடி நகர சபையின் மாட்டு இறைச்சி வெட்டும் மடுவத்தில் மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்கள் மாடுகளை வெட்டுவதற்காக கொண்டு சென்ற போது அங்கு கடமையாற்றும் குறித்த நகர சபை ஊழியர் மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் முறன்பாடாக நடந்து கொண்டதையடுத்தும் தகாத வார்ததைகளை கொண்டு பேசியதாலும் இவர்கள் தமது இறைச்சிக்கடைகளை மூடி பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குறித்த நகர சபை ஊழியர் அடிக்கடி இவ்வாறு மாடு வெட்டும் மடுவத்தில் மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்களுடன் முறன்பாடாக நடந்து கொள்வதாலும் தகாத வார்த்தைகளை கொண்டு பேசுவதாலும் தாம் மாடுகளை வெட்டுவதற்கு பல்வேறு அசெகரியங்களை சந்திப்பதாக மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் இன்று காலை காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரனுக்கும் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்ளுக்குமிடையில் விஸேட சந்திப்பொன்று இடம் பெற்றது.

இதன் போது தமது கோரிக்கையினை மாட்டிறைச்சிக்கடை உரிமையாளர்கள் முன் வைத்ததுடன் தாம் மடுவத்தில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் விளக்கி கூறினர்.

இதனையடுத்து குறித்த நகர சபை ஊழியரை அங்கிருந்து இடமாற்ற தான் உடனடி நடவடிக்கை எடுப்பதாக காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் உறுதியளித்தார்.

இது தொடர்பாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரியுடன் கலந்து பேசியுள்ளதாகவும் ஒவ்வொரு மாதமும் மாடுவெட்டும் மடுவத்திற்கு நகர சபையினால் வௌ;வேறு ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் குறிப்பிட்டார்.

காத்தான்குடி நகர சபை பிரிவில் 20 மாட்டிறைச்சி விற்பணை செய்யும் விற்பணை நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment