Wednesday, February 26, 2014

அக்கரைப்பற்றில் குடிகாரர்களின் தொல்லை அதிகரித்ததோடு அடாவடித்தனமும் அதிகரிப்பு



=- முஹம்மது அப்துல் -=

அண்மைக்காலமாக அக்கரைப்பற்றில் குடிகாரர்களின் தொல்லை அதிகரித்துள்ளமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக முஸ்லீம் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு அவர்களது அடாவடித்தனமும் அதிகரித்துள்ளது.

இஸ்லாம் மதுவினை ஹராம் என தடை செய்துள்ளநிலையில் முஸ்லீம்கள் மத்தியில் மதுபாவனை அதிகரித்துள்ளமையானது அக்கரைப்பற்றில் இஸ்லாத்தின் வீழ்ச்சியினையே எடுத்துக்க்கட்டுகின்றது.

“இஸ்லாத்தினை தூய வடிவில் பரப்புவோம், பாதுகாப்போம்” என மேடைக்கு மேடை சவால் விடும் தஹ்வா குழுக்கள் ( தப்லீக் முதல் தவ்ஹீத் வரை) இந்த சமுதாயச் சீரழிவினை தடுக்க முனையாதது ஏன்? இது ஒரு பர்ளு கிபாயா இல்லையா?

அக்கரைப்பற்றின் உலமா சபையினரே! நீங்கள் இவற்றை கண்டும் காணாதது போல் இருப்பது ஏன்? அல்லாஹ் உங்களிடம் கேட்கமாட்டான் என எண்ணிவிட்டீர்களா?
குறிப்பாக பள்ளிகளின் அண்மையில் இந்த குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது எமது தஹ்வா பணியின் வீழ்ச்சியினை பறை சாற்றுகின்றதே! எமது பெரிய பள்ளியடி, பதுறுப் பள்ளியடி மற்றும் பச்சைப் பள்ளியடிகளில் இந்த குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கட்டுப் படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என உடன் தீர்மானிக்க வேண்டிய கடமைப்பாடு நம் அனைவருக்கும் உரியதே!

“அக்கரைப்பற்று பெரிய பள்ளியிற்கு முன்னால் இரவு 1௦ மணியானால் செல்ல முடியவில்லை.. அந்த பகுதி குடிகாரன் தொல்லை தாங்க முடியவில்லை” என ஒருவர் ஆதங்கப்பட்டார். பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? அல்லது அக்கரைப்பற்று போலீசாராவது நடவடிக்கை எடுப்பார்களா?

அக்கரைப்பற்றின் இந்த அவலத்தினை நீக்க நாம் அனைவரும் முயல வேண்டும்… இதற்கான எமது பங்களிப்புக்கள் எவ்விதத்தில் அமைய வேண்டும் என முக நூல் நண்பர்களின் ஆலோசனைகளினையும் ஒத்துழைப்பினையும் எதிர்பார்கின்றோம்!

தயவு செய்து கருத்துக்களை பரிமாறுங்கள்! இதற்கொரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்க்காக இத்தகவலினை இயலுமானவரை share பண்ணுங்கள்.

“பாவம் நடக்கும் போது அதனை கைகளினால் தடுக்கவும், இயலாதவன் நாவினால் தடுக்கட்டும், இயலாதவன் மனத்தால் வெறுக்கட்டும். அதுதான் ஈமானின் கடைசிப்படி” என நபி (ஸல்) கூறினார்கள்!

அல்லாஹ் இம்முயற்சிக்கு வெற்றியைத் தருவானாக! ஆமீன்!

No comments:

Post a Comment