Thursday, November 28, 2013

தேரரின் செயலைக் கண்டித்து மட்டக்களப்பின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் - புகைப்படம் இணைப்பு

(ஜதுர்சயன்) 

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் அமைந்துள்ள பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு அத்துமீறி நேற்று (27 ) புகுந்த பௌத்த மதகுரு ஒருவர் அங்கு பிரதேச செயலாளரை அச்சுறுத்தி பிரதேச செயலாளர் அறையின் மேசையிலிருந்த கணணி, தொலைபேசி மற்றும் பெக்ஸ் இயந்திரம ஏனைய ஆவணங்களை தூக்கி வீதியுள்ள சம்பம்பத்தினை மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச செயக உத்தீயோகஸ்தர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.


இதற்கு மேலாக இன்று (28) மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டிப்பளை மற்றும் வெல்லாவெளி பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் உட்பட ஏனைய பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்களும் நண்பல் 12 மணியிலிருந்து தமதுபணிப் பகிஸ்க்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் குறித்த பௌத்த மதகுருவினை கைது செய்யுமாறும் உத்தியோகஸ்தர்கள் பதாகைகளை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


'தேசியக் கொடியினை காலால் உதைத் தேரரே இதுதான் உனது தேசப்பற்றா' , 'கைது செய் கைது செய் அம்பிட்டிய சுமணரெத்திர தேரரைக் கைது செய்' , 'பிக்குவின் அட்டகாசம் ஒழிக' , ' பிரதேச செலாளருக்கே இந்த நிலை என்றால் சாதாரண ஊழியர்களுக்கு என்னகெதி' பேன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு பட்டிப்பளை பிரதேச செயலய உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.


எமது பிரதேச செயலாளரையும் அலுவலக உத்தயோகஸ்தர்களையும் அவமதித்து பாதுகாப்பு அச்சுறுத்தல் செய்த பௌத்த பிக்குவை உடனடியாக சட்டத்தின்முன் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை, பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகஸ்தர்களிடமும் குறிப்பிட்ட நபர்கள் மன்னிப்புக்கேட்கும் வரை தமது வேலை நிறுத்தப் பகிஸ்ரிப்பினைத் தொடரப் போவதாகவும் பட்டிப்பளை பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.


பிரசே செயலகங்களுக்கு முன்னால் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

No comments:

Post a Comment