Wednesday, November 20, 2013

நிந்தவூர் சம்பவங்களை பற்றி ஒரு காதில் வாங்கி மறு காதால் விட்ட SLMC தலைவர்

நிந்தவுரில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நேரடியாக அந்த மக்களை சந்திப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் முயற்சிக்காதது பலத்த கண்டனத்தைத் தோற்றுவித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கூடுதலான ஆதரவை அளித்து வரும் நிந்தவுர் பிரதேசம் இன்று நெருக்கடியானதொரு கட்டத்திற்குள் தள்ளப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் ஹக்கீம் உடனடியாக அங்கு விஜயம் செய்யாதது அவரது மனநிலையின் தோற்றத்தை வெளிப்படையாகக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

நேற்று திருகோணமலையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட ஹக்கீம் மாலை நேரத்தில் நிச்சயம் நிந்தவுரிற்கு வருவார் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் மெதுவாக கொழும்புக்கு சாக்குப்போக்குக் காரணத்தைக் கூறி தப்பித்துவிட்டார்.

திருகோணமலையிலிருந்து நிந்தவுரிற்கு சுமார் இரண்டரை மணித்தியாலயத்தில் பயணம் செய்யலாம். அப்படியான நிலையில் ஹக்கீம் வராமல் போனது மர்மம்தான். மக்கள் எப்போதும் துர்ப்பாக்கியசாலிகள்தான். தேர்தல் காலம் என்றால் ஹக்கீம் சூறாவளிப்பயணம் செய்திருப்பார். இன்று அஸ்ரப் உயிரோடு இருந்திருந்தால் சும்மாவா இருந்திருப்பார்.

நிந்தவுர் மக்களே இனியாவது சிந்தியுங்கள். உங்களது எம்.பி.க்கள் என்ன செய்கின்றனர். போனஸ் எம்.பி.யான மூத்தவர் ஹசன் அலியும் திருகோணமலையில்தான் ஹக்கீமோடு இருந்தார். அவராவது கூட்டி வந்திருக்கலாமே

No comments:

Post a Comment