Wednesday, November 27, 2013

முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ள்ளும் பிரச்சாரங்களை தடைசெய்யும்படி இரண்டு லட்சம் கையொப்பம்

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங் களை தடைசெய்யும்படி இலங்கை முஸ்லிம் பேரவை என்ற அமைப்பு ஜனாதிபதி செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளது. இதற்காக பள்ளிவாயல்கள் முன் பாக சேரிக்கப்பட்ட முஸ்லிம்களின் சுமார் இரண்டு லட்சம் கையொப் பங்கள் அடங்கிய பத்திரங் களையும் 
ஒப்படைத்துள்ளனர்.

 மேற்படி முஸ்லிம் பேரவையில் உள்ளவர்களை பார்த்தால் அவர் கள் அகில இலங்கை ஜம்இய் யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் மீடியா போரம் போன்றவற்றின் நிர்வாகத்தில் உள் ளவர்களே இதிலும் இருக் கிறார்கள்.

 அப்படியாயின் தங்களது அமைப்புக்களால் இனி எதையும் இது விடயத்தில் செய்ய முடியாது என்பதாலேயே புதிதாக அமைப்பொன்றை உருவாக்கி அதன் மூலம் ஜனாதிபதி செயலாளரை சந்தித்து இதனை ஒப்படைத்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

ஆக இன்னுமின்னும் முஸ்லிம்கள் மத்தியில் அதுவும் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டுமே நிர்வாகிகளாகக்கொண்ட கொண்ட பல பொது அமைப்புக்கள்தான் பல பெயர்களில் உருவாகின்றனவே தவிர முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை யாராலும் தீர்க்க முடியவில்லை என்பது தெளிவா கிறது. ஆகக்குறைந்தது இரண்டு லட்சம் முஸ்லிம்களின் ஒப்பந் தங்களுடன் ஜனாதிபதியைக்கூட நேரடியாக சந்தித்து இதனை வழங்க முடியாத அளவுதான் இவர்களது செல்வாக்கு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவே முஸ்லிம்களின் ஓர் அரசியல் கட்சி இரண்டு லட்சம் கையொப்பங்களுடன் சென்றி ருந்தால் நிச்சயம் ஜனாதிபதியின் நேரடி கவனத்தை அது ஈர்த்திருக்கும் என்ற யதார்த் தத்தைக்கூட இன்னமும் முஸ்லிம் சமூகமும் அதன் புத்திஜீவிகளும் புரிந்து கொள்ளாமல் உள்ளார்கள்.

இவ்வாறு முஸ்லிம் களுக்கெதிரான பிரச்சாரங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தாமல் அலட்சியமாக இருப்பதற்கான காரணம் முஸ்லிம்களும் முஸ்லிம் கட்சிகளும், பொது அமைப்புக்களும் அரசுக்கு ஜால்ரா அடிப்பபவர்களாக இருப்பதும், இலங்கை முஸ்லிம் களை ஜனநாயக இஸ்லாமிய அரசியல் மயப்படுத் தாததுமேயாகும். இவ்வாறான அமைப்புக்கள் அரசுக்கு ஆதரவான அமைப்புக்கள் என்பதும் அவற்றின் பிரதிநிதிகள் உள்ள மேற்படி முஸ்லிம் பேரவையும் அரசுக்கு ஆதரவானதே என்பதையும் நூறு வீத உத்தரவாதத்துடன் கூற முடியும். இந்த நிலையில் மேற்படி இரண்டு லட்சம் கையெழுத்துக்கள் எத்தகைய தாக்கத்தையும் அரசில் ஏற்படுத்தாது என்பதையும் இது பற்றி ஜனாதிபதியோ இந்த அரசாங்கமோ கொஞ்சமும் கணக்கில் எடுத்துக்கொள்ளவு மாட்டார்கள் என்பதையும் உறுதியாக கூற முடியும்.

நாம் அடிக்கடி சொல்லி வருகின்ற ஒரு விடயம்தான், அர சாங்கம் துப்பாக்கிகளுக்கோ, பணத்துக்கோ அஞ்சாது, மாறாக மக்களின் வாக்குகளுக்கே அஞ்சும் என்பதாகும். மேற்படி இரண்டு லட்சம் கையொப்பங்களும் அரசுக்கு ஆதரவா னவர்களால் ஒன்று திரட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளதால் அவை அரச ஆதரவு கையெழுத்துக்களாகவே அரசாங்கம் பார்க்கும் என்பதால் அவை குப்பைத்தொட்டிக்குள்தான் தஞ்சம மாகும் என்பதையும் உறுதியாக சொல்ல முடியும்.

இந்த நிலையில் உல மாக்கள் தலைமையிலான அரசியல் அமைப் பொன்றின் மூலம் இத்தகைய கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு அவை அரசாங்கத்திடம் வழங்கப் படுமாயின் நிச்சயம் அவற்றை அரசு பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளும். காரணம் அரசில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சி ஒன்றின் வேண்டு கோளுக்கிணங்க மக்கள் லட்சக் கணக்கில் கையெழுத்திட்டு;ள்ளார்கள் என்றால் அது அரசின் சிந்தனையை தூண்டும்.
ஆனால் அவ்வாறு உலமாக் கள் தலைமையிலான அரசியல் கட்சி இதனை முன்னெடுப்பதற்கு உலமா சபைகளோ, பள்ளிவாயல் நிறுவ னங்களோ, பொது அமைப் புக்களோ நிச்சயம் உதவ முன்வர மாட்டார்கள். காரணம் அவர்களை பொறுத்த வரை முஸ்லிம்களின் பிரச்சினைகளை விட தங்களினதும், தமது அமைப் புக்களினதும் நலன்களே முக்கிய மானதாகும்.

எப்போது இந்த சமூகமும், முஸ்லிம் நிறுவனங்களும், புத்திஜீ விகளும் உலமாக்கள் தலைமை யிலான ஜனநாயக இஸ்லாமிய அரசியல் அமைப்புக்கு வெளிப்ப டையாக தமது ஆதரவை தெரிவிக்க ஆரம்பிக்கிறார்களோ அப்போதுதான் அரசாங்கம் முஸ்லிம்களின் பிரச்சி னைகளை தீர்க்க முன் வரும். ஏனெனில் அரசாங்கம் மக்களின் வாக்குகளுக்கு மட்டுமே அஞ்சும்.

No comments:

Post a Comment