Wednesday, October 2, 2013

தலிபான்கள் அலுவலகம் அமைக்க அரசு அனுமதிக்க வேண்டும் - இம்ரான் கான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் தெஹ்ரிக்-இ-இன்சாப் என்ற அரசியல் கட்சியை தொடங்கி அதன் தலைவராக உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் சில இடங்களில் வெற்றி பெற்ற அவரது கட்சி கைபர் - பக்துங்க்வா மாகாணத்தை ஆளும் கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று பேட்டியளித்த இம்ரான் கான், 'பாகிஸ்தான் அரசுடன் சமாதான பேச்சு வார்த்தையை தொடங்க வசதியாக தலிபான்கள் அலுவலகம் அமைக்க அரசு அனுமதிக்க வேண்டும்.

அதே வேளையில் தலிபான்கள் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றத்துக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். தலிபான்களுக்கு அரசு எவ்விதமான சமாதான திட்டத்தை முன்வைக்கிறது என்பதை பழங்குடியின மக்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்காக இது ஒரு வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment