Wednesday, October 2, 2013

2 வயது குழந்தையின் வயிற்றில் கரு

சீனாவில் 2 வயது குழந்தையின் வயிற்றில் வளர்ச்சி அடையாத கரு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் உள்ள குவாங்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதியின் 2 வயது மகன் ஷியாவ் பெங். இவன் பிறக்கும் போது மற்ற குழந்தைகளை போலவே நார்மலாக பிறந்தான். அவனுக்கு படிப்படியாக உடல் வளர்ச்சி ஏற்பட்டது.  ஆனால், 2 வயதை நெருங்கும் போது அவனது வயிறு மட்டும் மிகவும் பெருத்து காணப்பட்டது. மூச்சு திணறலால் குழந்தை கஷ்டப்பட்டது. வழக்கமாக குழந்தைகளுக்கு வரும் பிரைமரி காம்ப்ளக்ஸ் நோய்தான் என்று பெற்றோர் கருதினர். ஒரு நாள் மூச்சு திணறல் அதிகரிக்கவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவனை சோதனை செய்த டாக்டர்கள், ஷியாவ் பெங் வேறு வகையாக அவதிப்படுவது தெரிந்தது. உடனடியாக அவனை முழுமையாக ஸ்கேன் செய்து பார்த்த போது அவனது வயிற்றில் வளர்ச்சி அடையாத கரு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த கரு பின்னர்  வயிற்றுக்குள் கட்டி போல வளரத் தொடங்கியிருந்தது. உடனடியாக சிசேரியன் மூலம் அதை அகற்ற முடிவு செய்தனர். 

இதுகுறித்து டாக்டர் ஜோனாத்தன் பனராப் கூறுகையில், 

குழந்தையின் தாய் கருவுறும் போது இரட்டை குழந்தைக்கான கருவுறுதல் நடந்துள்ளது. ஆனால், தவறுதலாக ஒரு கரு முட்டை இவனது வயிற்றுக்குள் சென்று வளர்ச்சி அடையாமல் ஒரு கட்டத்தில் நின்றுள்ளது. இது மருத்துவ உலகில் மிக அரிதிலும் அரிதாக நடக்க கூடிய செயல் என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment