Saturday, December 14, 2013

இனி ஐபிஎல் போட்டிகளில் கலர் கன்னிகளின் டான்ஸ் கிடையாது!

வரும் ஐபிஎல் போட்டிகளின்போது சியர் லீடர்ஸ் டான்ஸ் ஆட மாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய துணை தலைவர் ரவி சாவந்த் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் என்றால் ரசிகர்களுக்கு அதிரடி ஆட்டம் தவிர நினைவுக்கு வருவது சியர் லீடர்ஸ் தான். மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தை விட பலர் சியர் லீடர்ஸின் ஆட்டத்தை தான் ஆர்வமாக பார்ப்பார்கள். அவர்கள் ஆடும்போது அரங்கமே அதிருமாக்கும்.

சென்னை அணி  
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ரன்கள் குவிக்கையில் அத்தனை ரசிகர்களின் கண்களும் போவது சியர் லீடர்ஸ் பெண்கள் போடும் ஆட்டத்தை பார்க்கத் தான்.

கெய்ல் புயல்  

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சியர் லீடர்ஸ் பெண்களுக்கு கெய்ல் பேட் பண்ண வந்தால் வியர்த்து விறுவிறுத்துப் போய்விடும். கெய்ல் தன் பாட்டுக்கு ரன்களாக குவிக்க சியர் லீடர்ஸ் ஆடி ஆடியே முட்டி தேய்ந்து போவாரகள்.


கலர் கலர் டிரஸ்  

சியர் லீடர்ஸ் பெண்கள் கலர் கலராக உடை அணிந்து ஆடி உற்சாகப்படுத்துவது ரசிகர்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் ரசிகர்களின் தலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இடியை இறக்கியுள்ளது.



சியர் லீடர்ஸ் இல்லை  

அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஐபிஎல் 7வது சீசன் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. ஆனால் வரும் ஐபிஎல் போட்டிகளில் சியர் லீடர்ஸ் ஆட மாட்டார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய துணை தலைவர் ரவி சாவந்த் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment