Saturday, December 14, 2013

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் வேலைத் திட்டங்கள் பற்றிய மீளாய்வுக் கலந்துரையாடல்!

(ஹாசிப் யாஸீன்)
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் சேவைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றை மக்களின் காலடிக்கு கொண்டு செல்லல், சமூக சிவில் அமைப்புக்களை ஒன்றிணைத்து அவர்களின் தேவைகள், குறைபாடுகளை இனங்கண்டு தீர்த்து வைத்தல் மற்றும் காரியாலய மறுசீரமைப்பு தொடர்பாக தனது காரியாலய உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் இன்று (15) நடைபெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தித் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர்கள், இணைப்பாளர்கள், உத்தியோகத்தர்கள், மசூறா சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திட்டமிடல் உத்தியோகத்தர் ஐ.எல்.பஜ்ருதீன் வளவாளராக கலந்து கொண்டு அடிமட்ட மக்களின் குறைபாடுகளை இனங்காணல், துறைசார்ந்த அமைப்புக்களின் தேவைகளை இனங்காணல், மக்கள் தொடர்பாடல் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல், நடைமுறைப்படுத்தல் பற்றி விரிவுரைகள் நிகழ்த்தினார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரால் தனது உத்தியோகத்தர்களுக்கு பணிக்கப்பட்ட வேலைத் திட்டங்கள், மக்கள் பணிகள் என்பன பற்றி மீளாய்வு செய்யப்பட்டதுடன் அடுத்த ஆண்டு மாவட்ட மட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான முன்னெடுப்புக்கள் பற்றியும் ஆராயப்பட்டன.

No comments:

Post a Comment