Monday, November 18, 2013

யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஆதரவளித்துள்ளதா? - திஸ்ஸ கேள்வி

சர்வதேச யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு அரசாங்கம் ஆதரவளித்துள்ளதா என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் இறுதியில் கைச்சாத்திடப்பட்ட ஆவணத்தில், யுத்தக் குற்றச் செயல் விசாரணையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்களினால் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையானது இலங்கைக்கு எதிராக, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதற்கு வழி அமைத்துக் கொடுக்கக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 98 அம்சங்கள் உள்ளடங்கிய ஆவணமொன்று இவ்வாற கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், 33ம் அம்சத்திலிருந்து சர்வதேச மனித உரிமைச் சட்டம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆவணத்தில் கைச்சாத்திட்டதன் மூலம் சர்வதேச மனித உரிமை மீறல் விசாரணைகளுக்கு இலங்கை இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது மிகவும் பாரதூரமான ஓர் நிலைமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்த வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment