Sunday, November 17, 2013

நிந்தவூர் மக்களை இலிவாக கருதிய அதிரடிப்படை வீரர்கள் அடையாளம் காணப்பட்டனர்


நிந்தவூரில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக திருட்டு மற்றும் வீடுகளுக்கு கல் எறிதல் என பொது மக்களை அச்ச நிலைக்கு உட்படுத்திக் கொண்டிருந்த குழுவினரை நேற்று இரவு 11 மணியளவில் பொது மக்கள் கடற் கரைப் பூங்காவிற்கு அருகில் மடக்கிப் பிடிக்க முற்பட்ட போது, குறிப்பிட்ட குழுவினர் பாதுகாப்பு தரப்பினர் என அடையாளங் கண்டுள்ளனர்.

அடையாளம் காணப்பட்டவர் அதிரடிப்படை வீரன் (STF) எனவும் தெரிய வருகிறது.

தற்போது இவர்கள் பொது மக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை மேற் கொண்டிருக்கின்றார்கள்.

இதே வேளை, நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பொது மக்களை ஒன்று திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

குறிப்பு .:- நிந்தவூரில் இடம்பெற்ற சம்பவத்தில் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட சிலருக்கு காயம்.

காயமடைந்தவர்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும், நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

பிரதேச சபைத் தவிசாளர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment