Wednesday, October 2, 2013

கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 100 வது கடினபந்து கிறிக்கட் சுற்றுப் போட்டி

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகம் தனது கிறிக்கட் வரலாற்றில் தடம் பதிக்கின்ற நிகழ்வாக 100 வது கடினபந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியொன்றினை கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இதன் ஆரம்ப கட்டமாக கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 100 வது போட்டித் தொடருக்கான விசேட இலட்சனையை வெளியிட்டு வைக்கும் நிகழ்வினை கல்முனை மாநகரசபை கட்டத்தில் கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment