Friday, December 13, 2013

அநாதைவிடுதியில் கைவிடப்பட்ட நிலையில் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் (படங்கள் )


சீனாவிலுள்ள அநாதை விடுதியொன்றில் ஒட்டிப்பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகள் கைவிடப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

அந்தக் குழந்தைகளை பராமரிக்க முடியாத நிலையில்  பெற்றோர் அங்கு கைவிட்டுச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

பிறந்து 03 மாத காலமான மேற்படி குழந்தைகள் வயிற்றுப் பகுதியில் ஒன்றுடனொன்று இணைக்கப்பட்டு காணப்பட்டன.

ஹெனான் மாகாணத்தில் பிங்டிங்ஷான் நகரிலுள்ள கைவிடப்பட்ட இந்த ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு ஸெங் ஹன்ஜிங் மற்றும் ஸெங் ஹன் வி என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பில் அந்த விடுதியின் ஊழியரான டென் ஸிஸின் விபரிக்கையில்,
தமது விடுதி வரலாற்றில் மேற்படி இரட்டைக் குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதற் தடவையாகும்.

இந்நிலையில் இந்தக் குழந்தைகள் பீஜிங் நகரிலுள்ள மோசி கோர்ப்ஸ் சிறுவர்கள் இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

அங்கு அக்குழந்தைகளை பிரிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

உலகில் ஒவ்வொரு 200,000க்கும் சுமார் ஒரு பிறப்பாக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment