Saturday, November 16, 2013

வடக்கு நோக்கி புறப்பட்டார் பிரித்தானியப் பிரதமர் : கண்ணீர்மல்க நீதிக்காய் காத்திருக்கும் மக்கள் !

வட தமிழீழத்தின் யாழ்குடாவுக்கான பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமறூனின் வருகையினையொட்டி காணாமல் போனோரது உறவினர்களது கவனயீர்ப்பு போராட்டம், யாழ் பொதுநூலக சுற்றத்தில் கண்ணீல்மல்க காத்து நிற்ப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஏற்பாட்டில் ஒருங்குசெய்யப்பட்டிருந்த இந்தக் கவனயீர்ப்பு போராட்டமானது நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகியிருந்தது.

'இராணுவத்திடம் கையளித்த எங்கள் பிள்ளைகள் எங்கே','அபிவிருத்தி வேண்டாம் எங்கள் பிள்ளைகள் வேண்டும்'ஈதழிழர் என்றால் நாயா நாய் மாதிரி அலையவிர்றாங்களே' போன்ற பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு மக்கள் கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர் என யாழ் செய்திகள் தெரிவித்துள்ளன.

ஒருபுறம் சிங்கள புலனாய்வாளர்கள் மறுபுறம் அனைத்துலக ஊடகவியலாளர்கள் என மக்களது காத்திருப்பின் புறச்சுழல் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமறூன் அவர்கள், கொழும்பில் இருந்து சிறப்பு குழுவொன்றுடன வட தமிழீழம் நோக்கி சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் செல்லும் பிரித்தானியப் பிரதமர் வட மாகாணைசபை முதல்வர் அவர்களைச் மற்றும் தமிழர் அரசியல் சமூக பிரதிநிதிகளைச் சந்திப்பார் என தெரிவிக்கப்படுவதோடு நில அபகரிப்புக்கு எதிராக வலி மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தினையும் கவனத்தில் கொள்வார் என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment