Monday, November 18, 2013

நாங்கள் யார் என்பதை ஐக்கிய தேசியக் கட்சிக்கு காட்டும் நேரம் வந்து விட்டது - பொதுபல சேனா

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக மாற்று எதிர்க்கட்சியை உருவாக்க அரசியலில் இறங்க போவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, சமகி அமைப்பு போன்ற நாட்டுக்கு எதிரான அமைப்புகளுடன்
இணைந்து சீர்கெட்டு போகும் என்றால் நாட்டுக்கு தேவையான முக்கியமான எதிர்க்கட்சியை உருவாக்க பொதுபல சேனா அமைப்பு உதவும் என அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் கைப்பாவையாக செயற்படுவதாக எதிர்க்கட்சி எங்கள் மீது குற்றம் சுமத்தி வருகிறது. எதிர்க்கட்சி களின்   விருப்பு வெறுப்புகளை செய்து வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்துகிறது.
தொடர்ந்தும் இப்படியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் நாங்கள் பௌத்தர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில்  எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எமது பிக்குமார் சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறிகொத்த என்பது முக்கியமான அரசியல் தலைவர்களை உருவாக்கிய இடம். அப்படியான இடத்தை ஏன் அடிப்படைவாதத்தை தூண்டுபவர்களுக்கு வழங்கினார்கள்?.
பிரிவினைவாதத்தையும் அடிப்படைவாதத்தை தூண்டுபவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி உதவி வருகிறதா என அந்த கட்சியின் பிக்குகள் முன்னணியிடம் கேள்வி எழுப்புகிறேன் என்றார்.-TC

No comments:

Post a Comment