Tuesday, October 1, 2013

சத்தம் போடும் வாகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சர் சுசில்



சூழலுக்கு அதிக சத்தத்தை வெளியிட்டவாறு பயணிக்கும் வாகனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் அடிப்படையில், இது தொடர்பான புதிய சட்டமூலம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் காலத்தில் காவல்துறையினர் இது தொடர்பான சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்துவர் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment